ஒரு தடவை சார்ஜ் செய்தால்  90 கி.மீ. தூரம் செல்லும்  பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

by Editor / 21-09-2021 04:02:15pm
ஒரு தடவை சார்ஜ் செய்தால்  90 கி.மீ. தூரம் செல்லும்  பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பைக், ஸ்கூட்டர், ஆட்டோ தயாரிக்கும் பஜாஜ் ஆட்டோ, சென்னையில் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவைத் துவக்கவுள்ளது. வாடிக்கையாளர் ரூ. 2 ஆயிரமாக- முன் பணம் செலுத்தி பிரத்தியேகமாக இந்த ஸ்கூட்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதன் விலை ரூ.1.46 லட்சமாகும்.


பெரும்பாலான நகரங்களில் பதிவு துவங்கி 72 மணி நேரத்திற்குள் பதிவுகள் நிறைவுக்கு வந்தன. இது போன்ற வரவேற்பு சென்னையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 12 ஆயிரம் கிமீ-க்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை குறைந்தபட்ச பராமரிப்பு தேவைப்படுகிறது மற்றும் 3 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ. பேட்டரி உத்தரவாதமும் கிடைக்கிறது.
சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது.பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பின்வரும் தனித்துவமான 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிறது மற்றும் 60 நிமிடங்களில் 25% விரைவான சார்ஜ் வசதியும் உண்டு. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 90 கி.மீ. வரை பயணிக்க முடியும்.


டேட்டா இணைப்பு மூலம் myChetak செயலியில் விபத்து ஏற்பட்டால் அது குறித்த அறிவிப்புகளை பெறலாம் .

 

Tags :

Share via