மம்தா, தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரும் கெஜ்ரிவால்

by Staff / 22-05-2023 12:32:43pm
மம்தா, தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரும் கெஜ்ரிவால்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வாரம் திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி தலைவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரவுள்ளார். செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் மேற்குவங்க முதலமைச்சரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாக கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். புதன்கிழமை மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும், மே 25ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரையும் சந்திப்பார்.

 

 

Tags :

Share via