செங்கோட்டை- புனலூர் இடையே இன்று முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம்.

by Editor / 28-07-2024 12:25:14pm
செங்கோட்டை- புனலூர் இடையே இன்று முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம்.

செங்கோட்டை- புனலூர் இடையேயான ரயில்வே வழித்தடத்தில் மின் மயமாக்கும் பணி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதன் பணியானது நிறைவு பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கட்டங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் செங்கோட்டை- புனலூர் இடையான ரயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடத்தில் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண். 16792, பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

ரயில் எண். 16102, கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். ரயில் எண். 16101, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை  முதல் (29.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

ரயில் எண். 16327, மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று  முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். ரயில் எண். 16328, குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் (29.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

மேலும், காலை 7 மணிக்கு புறப்படும், ரயில் எண். 06685, திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயிலும், மாலை 06686, செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலும் இன்று  முதல் (28.07.2024) மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண். 16361/16362, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்ற பிறகு மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும்.

 அதன்படி, சென்னை எழும்பூர்- கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் கொல்லம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலும், நெல்லை-பாலக்காடு விரைவு ரயிலும், மதுரை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று முதல் செங்கோட்டை- புனலூர் இடையேயான மின்மயமாக்கப்பட்ட வழிதடத்தில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உயரழுத்த மின் கம்பியில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உயரம் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லவோ, ஏற்றி செல்லவோ கூடாது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : செங்கோட்டை- புனலூர் இடையே இன்று முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம்.

Share via