பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி கோட்டையை நோக்கி அண்ணாமலை தலைமையில் பாஜக பேரணி

by Editor / 31-05-2022 08:24:53am
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி கோட்டையை  நோக்கி அண்ணாமலை தலைமையில் பாஜக பேரணி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதை சுட்டிக்காட்டிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும். இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்  என்றார்.

 திமுக மாநில வரியை குறைக்கவில்லை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசின் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று பிடிஆர் உறுதியாக அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது. தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக இன்று  காலை 10 மணிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து துவங்க உள்ளது.இதனைத்தொடர்ந்து அசம்பாஅவிதங்கள் ஏதும் உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி கோட்டையை  நோக்கி அண்ணாமலை தலைமையில் பாஜக பேரணி
 

Tags : BJP rally led by Annamalai towards the fort demanding reduction of tax on petrol and diesel

Share via