வரி பாக்கி: சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினர் உள்ளிட்ட 50 பேர் பெயர்பட்டியல் வெளியீடு.
நெல்லை மாநகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியீடபட்டுள்ளது.
முதற்கட்ட பட்டியலில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி வைத்தவர்களின் 50 பேர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு ₹1.39 கோடி வரி பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான இடம்,திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருடைய கட்டிடம், டான்சி நிறுவன கட்டிடம், சிறு குறு தொழில் நிறுவன இயக்குனர் அலுவலக கட்டிடம், சிட்கோ வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி கட்டாமல் வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு.
Tags : Tax arrears: Publication of list of 50 persons including the family members of the legislator.