மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்

by Staff / 27-09-2022 12:26:24pm
மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். கட்டிடத் தொழிலாளியான இவரின் மகள் மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பைக் கடந்த ஆண்டு முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். குடும்ப வறுமையை ஒரு பக்கம் துரத்தினாலும், அதை உதாசினப்படுத்திவிட்டு பகுதி நேர வேலைக்குச் சென்று தன்னை அதற்காக தயார்படுத்திக் கொண்டு வந்துள்ளார் ரக்சயா. கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அவர் மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் "Forever star India" என்ற அமைப்பு நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார். ஜெய்ப்பூரில் கடந்த 18ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். இந்தியா முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் பங்கேற்றதில், 750 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகினர். அதில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா "மிஸ் தமிழ்நாடு" பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

 

Tags :

Share via