வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி - முதல்வர் இன்று வழங்குகிறார்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்குகிறார். அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், விவசாயிகளுக்கு நிவாரண நிதி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல, கேலோ இந்தியா, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நிதி வழங்குகிறார். மேலும், அறநிலையத்துறை சார்பில் தங்க முதலீடு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :