பலாத்காரத்திற்கு ஆளானவர்களின் வீடியோ வாக்குமூலம் கட்டாயம்

by Staff / 01-07-2024 01:16:24pm
பலாத்காரத்திற்கு ஆளானவர்களின் வீடியோ வாக்குமூலம் கட்டாயம்

நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் ஒன்றாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி வழக்கின் விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via