தனியார் வங்கி ஏ.டி.எம்மில் மர்ம நபர் கொள்ளை முயற்சி.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள ஹெச்டிஎஃப்சி தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது இந்த ஏடிஎம்மில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம்மில் இருந்து மெஷினின் ஒரு பாகத்தை எடுக்க முயற்சி செய்துள்ளது பின்னர் எடுக்க முடியாததால் அங்கிருந்து சென்றுள்ளார் இது குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரிலும் சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடி காட்சிகள் ஆய்வு செய்ததில் ஏடிஎம்க்கு உள்ளே ஒரு மர்ம நபர் வருவதும் மெஷினை கையால் ஓபன் செய்ய முயற்ச்சி செய்வது பின்னர் திரும்பச் சென்றது பதிவாகியுள்ளது இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் உள்ள ஏடிஎம்மில் மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags :