ஆங்கில புத்தாண்டு அண்ணாமலையார் கோவிலில் 3 கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசை.
ஆங்கில புத்தாண்டு அண்ணாமலையார் கோவிலில் 3 கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசை.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவைத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயமாகும் இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்...
புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் வழியாக சென்று பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சென்று 50 ரூபாய் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு பின்னர், கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் சேர்ந்த பக்தர்களும், சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிக அளவு அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Tags : ஆங்கில புத்தாண்டு அண்ணாமலையார் கோவில்

















.jpg)
