புத்தாண்டு  கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடையே மோதல்.

by Staff / 01-01-2026 09:56:24am
 புத்தாண்டு  கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடையே மோதல்.

நாடு  முழுவதும் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது.ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டை ஊராட்சியில் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் ஸ்பீக்கர்களை வைத்து அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு  புத்தாண்டை கொண்டாடிய இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து செஞ்சி காவல்துறையினர் நேரடியாக சென்று அங்கிருந்த பொதுமக்களை கலைத்ததால் பரபரப்பு நிலவியது.மேலும் அதிக  ஒலி எழுப்பிய ஸ்பீக்கர்கள் 14 எல் இ டி  விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

 

Tags :  புத்தாண்டு இளைஞர்களிடையே மோதல்.

Share via