அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. திருமாவளவன்

by Staff / 28-02-2024 04:35:51pm
அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. திருமாவளவன்


திமுக ஆளும் கட்சியாக இருப்பதனால் அவர்களை பாஜக ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பலவீனமாக இருக்கும் அதிமுகாவை சிதறடிப்பதாற்கான வேலையை பாஜக செய்து வருகிறது. இதனால் அதிமுகவை சார்ந்த தொண்டர்களே தலைவர்களே எச்சரிக்கையாக இருங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். உங்கள் கட்சி அழிய வேண்டும் என ஒரு சராசரி அரசியல்வாதியாக நான் எப்போதும் நினைக்கமாட்டேன். அதிமுகவும் திமுகவும் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்ததால்தான் இங்கு சனாதனம் காலூன்ற முடியவில்லை. முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் வலிமையாக இருந்ததால்தான் பாஜக இங்கு வர முடியவில்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via