வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியா தம்பதிகள்.

by Staff / 07-11-2022 12:11:50pm
வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியா  தம்பதிகள்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் மூர்த்தி – பானுமதி தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும் பானுமதிக்கு 76 வயதும் ஆகிறது. இவர்கள் இருவரும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். அங்குள்ள இரும்பி கேட்டில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மழை காரணமாக அந்த அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அறியாமல் மூர்த்தி மின்விளக்கை தொட அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற மனைவி பானுமதி மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ 
 இடத்திலே உயிரிழ்ந்தனர் வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியா  தம்பதிகள்.
 

 

Tags :

Share via

More stories

Logo