4 இடங்களில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை

by Editor / 12-02-2023 01:31:29pm
4 இடங்களில் ஏ.டி.எம்.களை உடைத்து  ரூ.73 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போளூரில் ரூ.19.50 லட்சம், பணிமனை அருகே உள்ளே ஏடிஎம்மில் ரூ.31 லட்சம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சம், கலசப்பாக்கத்தில் ரூ.2.50 லட்சம் கொள்ளை என ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையை நிகழ்த்தியது ஒரே கும்பலா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏடிஎம் மையத்தை தீக்கரையாற்றியசம்பவம் குறித்து வேலூர் சரக டி ஐஜி எம்.எஸ். முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
 

 

Tags :

Share via

More stories