முன்னாள் அதிமுக அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாா்.
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி .பிரபாகரை சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதிமுகவிலிருந்து ஏற்கனவே ஐந்து பேர் தம் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இவரை சேர்த்து ஆறு பேர் எம்.எ.ல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எம் ஆர் விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த ஆறு பேரில் ஏற்கனவே 4 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் எம் .ஆர். விஜயபாஸ்கரும் இணைய உள்ளதாக தகவல். அ.தி.மு.கவில் தாங்கள் வகித்த மாவட்ட செயலாளர் பதவியை பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி வழங்காததனால் அதிருப்தியில் இருந்த அவர்கள் இப்பொழுது தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
Tags :



















