ஏக்நாத் சிண்டேவிற்கு உள்துறை வழங்கப்படுமா..?

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சிவ சேனா அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்த கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. கடந்த ஐந்தாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேவேந்திர பாட்னாஸ் முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சேனா கட்சியின் தலைவர் ஏக்நாத் சிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், வருவாய் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே டிசம்பர் 7 லிருந்து 9 வரை நடைபெறும் மூன்று நாள் சிறப்பு கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் சிண்டேவிற்கு உள்துறை வழங்கப்பட மாட்டாது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :