ரஷ்யா -உக்ரைன் போரை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் ட்ரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிபர் ஜெலென்ஸி சந்தித்து தம் ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவித்துள்ளார் ரஷ்யா -உக்ரைன் போரை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
.ரஷ்யா உக்ரைன் போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. உக்ரைனுக்கு அதனுடைய நேச நாடுகள் பல்வேறு பங்களிப்பை நிகழ்த்தி வருகின்ற நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடன் அணு ஏவுகணையை செலுத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ரஷ்யா மீது அமெரிக்க வழங்கிய ஏவுகணைகளை செலுத்தியது. இதன் காரணமாக ரஷ்யா பல்வேறு பாதிப்புகளை அடைந்ததனால் ,அணு ஆயுதப்போரை கையில் எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி விட்டதாக கூறி ரஷ்யா கடும் சீற்றத்தில் உள்ளது , டிரமின் இந்த முயற்சி நிகழ்கிறது..
Tags :