குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு குளிக்க தடை.

by Staff / 17-10-2025 10:16:32am
குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு குளிக்க தடை.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக காலம் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் 16ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது இந்த கனமழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வருவதை தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக இன்று தடை விதித்துள்ளது என் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

 

Tags : குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு குளிக்க தடை.

Share via