பேரரசுகள் வீழ்ந்தது போல், திராவிட கட்சிகளும் வீழும் - சீமான்

by Staff / 17-10-2023 02:46:13pm
பேரரசுகள் வீழ்ந்தது போல், திராவிட கட்சிகளும் வீழும் - சீமான்

உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களை நம்பியே தேர்தல் களம் காண்கிறோம். திமுக அரசு வாக்குறுதிகளை 100 சதவிகிதம் நிறைவேற்றவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது. இந்த உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும். விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதால் இதுவரை இல்லாத நெருக்கடியை 'லியோ' படத்திற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது என்றார்.

 

Tags :

Share via