நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று டி.. இமான் குற்றச்சாட்டு

by Admin / 17-10-2023 03:36:13pm
 நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை  செய்துவிட்டார் என்று  டி.. இமான் குற்றச்சாட்டு

இனி நடிகர் சிவகார்த்திகேயயனுடன் இணைந்து வேலை செய்ய மாட்டேன் என்று இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்துள்ளார். டாக்டர், சீம ராஜா ,ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு டி.. இமான் இசையமைத்துள்ளார்

.இருவருக்கு இடையே என்ன பிரச்சனை என்று சொல்வதற்கு டி.. இமான் மறுத்துவிட்டார். ஆனால் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்துவிட்டார் என்று ஈமான் குற்றச்சாட்டினார். அடுத்த ஜென்மத்தில் நான் நடிகராக இருந்து அவர் இசையமைப்பாளராக இருந்தாலும் கூட அவருக்கு நான் வேலை செய்ய மாட்டேன் என்பது போன்ற கருத்தை அவர் பதிவு செய்துள்ளார் .சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அப்படி பாதிக்கின்ற துரோகச் செயல்களை மனது அகற்றாமல் அதை ஒதுக்கி தள்ள முடியாமல்தவித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது கலுவேற்றி மூர்க்கன் என்கிற படத்திற்கு இசையமைத்து வருவதோடு சில படங்களில் நடித்தும் வருகிறார்  டி.. இமான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via