திரைப்பட இயக்குனர் வி .சேகர் காலமானார்..

by Admin / 15-11-2025 12:59:20am
திரைப்பட இயக்குனர் வி .சேகர் காலமானார்..

பிரபல திரைப்பட இயக்குனர் வி சேகர் உடல் நலகுறைவு காரணமாக போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்..

 1990 இல் நீங்களும் ஹீரோதான் என்னும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக உருவான வி சேகர் எம் ..ஏ படித்து.. அரசு பணியில் இருந்தார்.. அவரது மனைவியின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் அவரை அடியொற்றி இவர் 17 படங்களை இயக்கினார்.. இரண்டு தொலைக்காட்சி தொடர்களையும் எடுத்துள்ளார்.. இவர் மகன் காரல் மார்க்சை வைத்து 11 ஆண்டு கால இடைவெளியில் சரவணப் பொய்கை என்னும் படத்தை இயக்கினார்.. அதற்குப்பின் இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை...இவருடைய படங்கள் அனைத்தும் குடும்பப் பாங்கான கதை அம்சம் கொண்ட படங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கிய படங்களில் பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா ,எல்லாமே என் பொண்டாட்டி தான் ,விரலுக்கு ஏத்த வீக்கம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டன..

 

Tags :

Share via