இரட்டை கொலை

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தில்லையம்பூரில் இரட்டை கொலை படுகொலையான கோவிந்தராஜ் (75) மற்றும் அவரது மனைவி லட்சுமி (68) ஆகியோருக்கு உடல்கள் அழுகிய நிலையில் உள்ளதால் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் மேலும் சம்பவயிடத்தில் காவல்துறையினரின் மோப்பநாய் தஞ்சையில் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இரட்டை கொலை நிகழ்ந்த தில்லையம்பூர் பெருமாள் கோயில் அக்ரஹாரத்தில் உள்ள இவர்களது வீட்டிற்குள் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவிந்தராஜ் மற்றும் லட்சுமி ஆகியோரது மூத்த மகன் ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்த நிலையில் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Tags :