சாலையோரம் முதியவர் பிணம்

by Staff / 28-11-2022 04:24:46pm
சாலையோரம் முதியவர் பிணம்

பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் ஒரு சினிமா தியேட்டர் அருகே உள்ள சாலையோரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த முதியவர் கழுத்தில் உத்திராசமும், காவி நிறத்தில் ஆடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via