குரங்கு அம்மை நோயால் 524 பேர் பலி

by Staff / 16-08-2024 01:07:41pm
குரங்கு அம்மை நோயால் 524 பேர் பலி

ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் இதுவரை 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 524 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் காங்கோவில் கண்டறியப்பட்ட இந்த திரிபு, அங்கிருந்து கென்யா, ரூவாண்டா, உகாண்டா, பெரு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பரவி உள்ளது. குரங்கு அம்மை வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாகும். காய்ச்சல், உடல்வலி, முதுகு வலி, உடல் நடுக்கம் ஏற்பட்டு, அடுத்த 5 நாட்களில் உடலில் சிவப்பு நிற கொப்புளங்களாக மாறுவது அதன் அறிகுறிகளாகும்.

 

Tags :

Share via