புதிய கல்விக்கொள்ளை கலந்துரையாடல். தமிழக அரசு புறக்கணிப்பு.

by Editor / 17-05-2021 08:09:27pm
புதிய கல்விக்கொள்ளை கலந்துரையாடல். தமிழக அரசு புறக்கணிப்பு.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக்கொள்கை குறித்த கலந்துரையாடலில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 2020ல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கலந்துரையாடலில் அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து இன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழக அரசு சார்பில் எந்தவொரு அதிகாரிகளும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

 

Tags :

Share via