அயலக உயர்கல்வித் திட்டம் - ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு

by Editor / 15-03-2025 01:38:18pm
அயலக உயர்கல்வித் திட்டம் - ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்திற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து, திறமையான மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்' கீழ் 2025-26ஆம் நிதியாண்டில் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via