பூத்துறை கடலில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

by Editor / 15-03-2025 01:43:14pm
பூத்துறை கடலில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பூத்துறை மீனவகிராமத்தை சேர்ந்த ஏசுபுத்திரன். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கிருத்திக் (12). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இன்று (மார்ச் 15) வீட்டின் பின்பகுதியில் கடலில் குளித்த போது திடீரென பெரிய அலையில் சிக்கி தத்தளித்தார். இதை பார்த்த மீனவர்கள் கிருத்திக்கை உடனடி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது கிருத்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மாற்றப்பட்டது. மகனை இழந்த தாய் தந்தை மகனை கட்டி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via