வைக்கோல் லாரியில் திடீர் தீ

by Staff / 15-02-2023 04:39:19pm
வைக்கோல் லாரியில் திடீர் தீ

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் வைக்கோல் கட்டுகளை வாங்கியுள்ளார். கணேசனுக்கு சொந்தமான வேனில் வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு தாண்டவராயபுரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி வலசக்கல் பட்டி சென்ற போது மின் கம்பி மீது உரசி களால் வேன் தீப்பற்றிக் கொண்டது. இதை அறிந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். இதனை அடுத்து கெங்கவல்லி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் வேனில் பரவிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைத்தனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பல் ஆகியது.

 

Tags :

Share via

More stories