இன்று  சென்னை எழும்பூரில் சர்வதேச ஹாக்கி ஆடவர்  சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது

by Admin / 03-08-2023 10:30:07am
இன்று  சென்னை எழும்பூரில் சர்வதேச ஹாக்கி ஆடவர்  சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது

இன்று  சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் சர்வதேச ஹாக்கி சம்மேளனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர்  சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறவுள்ளது .இப்போட்டி 16 ஆண்டுகள் கடந்து  இப்பொழுதுதான் நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது.இப்போட்டியில்  பாகிஸ்தான் ,ஜப்பான் ,சீனா,தென்கொரியா,மலேசியா,இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்க உள்ளன.

தமிழ்நாடு அரசு இதற்காக 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த ஹாக்கிப்போட்டிக்கான புரிதலை,விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆசியஆடவர்ஹாக்கிசாம்பியன்ஷிப்-2023,தமிழ்நாட்டிலுள்ள அளனத்து மாவட்டங்களுக்கும்  பாஸ் தி பால் கோப்பை  சுற்றுப்பயணம் செய்து  நேற்று சர்வதேச ஹாக்கி சங்கத்தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்  இணைந்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம் வழங்கினர்.இன்று மாலை 4.00 மணிக்கு கொரியா-ஜப்பான் அணி மோதும்  போட்டியுடன் ஹாக்கி போட்டி தொடங்குகிறது.
 

இன்று  சென்னை எழும்பூரில் சர்வதேச ஹாக்கி ஆடவர்  சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது
 

Tags :

Share via