பிரபல தமிழ் நடிகை புஷ்பலதா இயற்கை எய்தினார்

by Admin / 05-02-2025 10:25:58am
பிரபல தமிழ் நடிகை புஷ்பலதா இயற்கை எய்தினார்

பிரபல தமிழ் நடிகை புஷ்பலதா இயற்கை எய்தினார்.. 1958 ல் செங்கோட்டை சிங்கம் என்னும் படத்தில் புஷ்பலதா அறிமுகமாகி நானும் ஒரு பெண் எனும் படத்தில் ஏவிஎம் ராஜன் உடன் இணைந்து நடித்த பொழுது திருமணம் செய்து கொண்டார்.கொங்கு நாட்டு தங்கம், சாரதா, பார் மகளே பார் ,நானும் ஒரு பெண், கற்பூரம் ,ஜீவனாம்சம், காதல் ராமன் ,சகலகலா வல்லவன், சிம்லா வல்லவன் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கோவையை சொந்த ஊராக கொண்ட இவர் ஏ.வி.எம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. முருக பக்தராக பல்வேறு படங்களில் நடித்த ஏ.வி.எம். ராஜன் சொந்த படம் எடுத்ததோடு கடனின் காரணமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறி முழு நேர ஊழியராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதுமையின் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.

 

Tags :

Share via