ஆபத்தான தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்

புதுச்சேரி பெரியக்காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலை அபாயகரமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி இரவு நடந்த கொதிகலன் வெடித்து நடந்த பயங்கர விபத்தால் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜிப்மரில் அனும திக்கப்பட்ட 11 பேர் அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நிர்வாகம் சார்பில் கொண்டு செல்லப் பட்டனர். காலாப்பட்டு ஈ சி ஆர் சாலையில் மற்றொரு தொழிற்சாலை இயங்கி வருகிறது பாதுகாப்பு உறுதி தன்மை குறித்து அந்த கம்பெனியிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இதே போல் புதுச்சேரியில் சேதராப்பட்டு மேட்டுப்பாளையம் தட்டாஞ்சா வடி நெட்டப் பாக்கம் திருபுவனை கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆபத்தான தொழிற்சாலை களை அடையாளம் கண்டு உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
Tags :