நீட் 2023ஆண்டிற்கான  நுழைவு சீட்டுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள-w.w.w.neet.nta.nic. in இணையதளத்தை பாா்க்க..

by Admin / 20-04-2023 10:44:36am
 நீட் 2023ஆண்டிற்கான  நுழைவு சீட்டுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள-w.w.w.neet.nta.nic. in  இணையதளத்தை பாா்க்க..

 

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி தேர்வு இந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி நடைபெறுகிறது. இப்ப படிப்பிற்கு விண்ணப்பதிப்பதற்கான தேதியாக மார்ச் ஆறாம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாளாக ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை அறிவுறுத்திருந்தது .இந்நிலையில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு என்று அழைக்கப்படுகின்ற இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு 20 லட்சத்தி 87 ஆயிரம் பேர் விண்ணப்பத்தி இருப்பதாகவும்இந்தமுறை ஆண்களைவிட பெண் விண்ணப்பதாரர்கள் 2. 80 லட்சம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

தேசிய தேர்வு முகமை விரைவில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளநில பட்டைப் படிப்பு நீட் யுஜி 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடும். எம் பி பி எஸ் சோ்க்கைக்கான 2023 -கான தேசிய அளவிலான மருத்துவர் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இப்பொழுது அதிகாரப்பூர்வமாகன இணையதளமான நீட் டாட் என் டி ஏ டாட் நிக் டாட் இன் சென்று நீட் 2023ஆண்டிற்கான  நுழைவு சீட்டுக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். என்.டி.ஏ சமீபத்தில் நீட் இளநிலை படிப்பிற்கான புதிய ஒரு முறையை கொண்டு வந்துள்ளது மே ஏழாம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வை ஒரு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு விட குறைவாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய மையங்களை ஒன்றிணைக்கும் நிலைப்பாட்டை என் டி ஏ ஏற்படுத்தி உள்ளதாக தகவல். தேர்வு நுழைவீச்சீட்டை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான நீட் டாட் என்டிஏ டாட்நிக்  டாட்இன் -w.w.w.neet.nta.nic. in இன் 2023 இளநிலை அனுமதி சீட்டை வழங்கும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

 

Tags :

Share via