புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்.

by Editor / 17-04-2025 10:22:11pm
புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்.

புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த பட உள்ளதாக  மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியதகவலைத்தொடர்ந்து .மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகனத்தனிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது நாகையை சேர்ந்த லாரன்ஸ் என்பவர், புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.காரை நிறுத்தி காரில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் ரூ.8 கோடி மதிப்புள்ள 95 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து லாரன்ஸை கைது செய்து மெத்தபெட்டமைன், மற்றும் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்.

Share via