மிக்ஜாம் புயல் :மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்:

by Editor / 03-12-2023 09:10:39pm
மிக்ஜாம் புயல் :மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்:

மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள  முதல்வர்; மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 225 வீரர்கள் தயாராக உள்ளனர். மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்டுப்பாட்டு அறைகள் 24 மணிநேரமும் இயங்கி வருகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் மின்கம்பங்கள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags : மிக்ஜாம் புயல் :மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்:

Share via

More stories

Logo