வி.சி.க.வில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்..?-பரபரக்கும் அரசியல் களம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி பாஜகவில் இருந்து சமீபத்தில் காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விசிக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்தால் சேருவது குறித்து பரிசீலனை செய்வேன் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் திடீரென்று காயத்ரி ரகுராம் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். புத்தகம் வழங்கி அவரை தொல் திருமாவளவன் வரவேற்றார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நடந்தது. அதன்பிறகு அங்கிருந்து காயத்ரி ரகுராம் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய செல்கிறாரா..? பாராளுமன்றத்தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை அதிகரித்துள்ளது.
மேலும் இந்த சந்திப்பு குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‛‛எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது விசிக தலைவர், தொல் திருமாவளவன் எம்பி, விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருமாவளவனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காயத்ரி ரகுராம் அம்பேத்கர் திடலில் சந்தித்தார்” என போட்டோவுடன் பதிவு செய்துள்ளார்.
Tags : வி.சி.க.வில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்..?-