12 நாட்களில் 16 பேரை கொன்ற யானை-விசாரணைக்குழு அமைப்பு.

by Editor / 22-02-2023 07:51:46am
12 நாட்களில் 16 பேரை கொன்ற யானை-விசாரணைக்குழு அமைப்பு.

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோஹர்தக்கா மற்றும் ராஞ்சி மாவட்டங்களில் யானை ஒன்று உயிர்பலி வாங்கி வருகின்றது. கடந்த 12 நாட்களில் 16 பேரை யானை கொன்றுள்ளது. அனைவரையும் கொன்றது ஒரே யானையா? என்பது குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இந்த யானை அச்சுறுத்தல் காரணமாக இட்கி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜார்க்கண்டில் கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 462 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo