by Staff /
11-07-2023
12:05:51pm
டெல்லியில் ஜூலை 18 ஆம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தவிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Share via