100 ஆண்டுகளுக்கு பூமிக்கு விண்கல் அச்சமில்லை ..
விண்கற்கள் பூமியை நெருங்குகிறது என அடிக்கடி எச்சரிக்கை வெளியாகி வருகின்றது. விண்கல் பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட விண்கல் ஒன்று, நாளை (ஏப்.26) பூமியை கடக்கவுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த விண்கல் மணிக்கு 62,723 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த விண்கல்லிற்கு, 2006 HV5 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விண்கல் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என கூறப்படுகிறது.
Tags :