ஜாபர் சாதிக் கைது: அண்ணாமலை கோரிக்கை

by Staff / 09-03-2024 02:28:09pm
ஜாபர் சாதிக் கைது: அண்ணாமலை கோரிக்கை

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo