78 வயது மூதாட்டி பலாத்காரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளியை சேர்ந்த 78 வயது மூதாட்டி கணவர் இறந்து விட்டதால் தனியாக வசிக்கிறார். கடந்ததினம் இரவு கோவில் திடலில் தெருக்கூத்து நடைபெற்றது. இதை பார்த்து விட்டு மூதாட்டி தனியாக வீட்டுக்கு சென்றார். அப்போது மூதாட்டியை வழிமறித்த 30 வயது வாலிபர் ஒருவர், வாயை பொத்தி புதருக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மதுபோதையில் இருந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். படுகாயமடைந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமையை உறவினர்களிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :