4 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு தானமாக வழங்கி முன்னாள் ராணுவவீரர்.

இந்த சம்பவம், கணவன்,மனைவிகளுக்கிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக அந்தபகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது உண்டியலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரம் இருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பத்திரத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அப்போது அவர் திருவண்ணாமலை ஆரணி அடுத்த கோவில் அருகே இருக்கும் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பது தெரிய வந்தது.
இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரி கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதையடுத்து இந்த சொத்து பத்திரம் பற்றி விஜயனிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டபோது, இந்த சொத்துக்களை முறையாக கோவிலுக்கு எழுதி தருவதாக கூறியுள்ளார். இந்த சொத்துக்கள் கோவிலுக்கு தான் சொந்தம் என்றும் முறைப்படி இதை நான் எழுதி தருகிறேன்.
அந்த சொத்து பத்திரத்தில் கோவில் அருகே 10 செண்ட் இடத்தில் 2 மாடி கொண்ட ரூ. 3 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகவும், சற்று தொலைவில் 1500 சதுர அடியில் அமைந்துள்ள 1 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகவும், இந்த 2 வீடுகளின் சொத்து பத்திரங்களை தான் விஜயன் கோவில் உண்டியலில் போட்டுள்ளார். இந்த 2 வீட்டினையும் விஜயன், தான் சம்பாதித்து கட்டியதாகவும், இது பூர்விக சொத்து கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே கோவில் உண்டியலில் கணவர் விஜயன் பத்திரத்தை போட்ட தகவல் அறிந்து அவரது மனைவி அங்கு வந்தார். மகள்களையும் கையோடு அழைத்து வந்திருந்தார்.
அப்போது கோவிலுக்கு இந்த சொத்துக்களை வழங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர். மேலும், கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்று எனக் கேட்டனர்
ஆனால், விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயிலுக்குத்தான் சொத்தை எழுதிவைப்பேன் எனக் கூறிவிட்டாா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சிலம்பரசன் கூறியபோது, பத்திரம் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Tags : 4 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு தானமாக வழங்கி முன்னாள் ராணுவவீரர்.