தொண்டைக்குள் வளர்ந்த முடி.. அரியவகை நோயால் அவதி

by Staff / 29-06-2024 02:37:56pm
தொண்டைக்குள் வளர்ந்த முடி.. அரியவகை நோயால் அவதி

ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த 52 வயது நபருக்கு தொண்டையில் முடிவளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு தொண்டை காரகரப்பினால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது இவருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்பட்டு அதில் சில முடிகள் வளர்ந்துள்ளது. இது Endotracheal Hair Growth எனப்படும் மிக அரியவகை நோயாகும். 10 வயதில் தொண்டைப்பகுதியில் ஆப்ரேஷன் செய்த பகுதியில் இந்த முடியானது வளர்ந்துள்ளது. இதனையடுத்து அந்த முடி அகற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து 14 ஆண்டுகள் முடி வளர வளர மருத்துவமனைக்கு சென்று முடியை பிடுங்கியுள்ளார். 2022ஆம் ஆண்டு புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியவுடன் முடி வளர்ச்சியும் நின்றுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via