குஜராத் விமான நிலையத்தில் திடீர் விபத்து

by Staff / 29-06-2024 02:32:13pm
குஜராத் விமான நிலையத்தில் திடீர் விபத்து

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றி இறக்கிவிடும் வாகனங்களுக்கான பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. மேற்கூரை சரிந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூன் 28) டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்மேலும் 5 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories