குரங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவளிக்க தடை 

by Editor / 04-02-2023 02:46:20pm
குரங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவளிக்க தடை 


தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் மற்றும் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் என ஆறு மாதங்கள் குற்றாலத்தில் சீசன்களைக் கட்டுவது வழக்கம் இதில் முதல் மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இதேபோன்று சபரிமலை சீசனில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்தில்  ஏராளமான அருவிகள் நிரம்பி உள்ளதால் இந்தப்பகுதி வனப்பகுதிகள் என்பதால்  ஏராளமான குரங்குகளும் வசித்து வருகின்றன. இங்குள்ள குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வகைகள் வழங்கி வருகின்றனர்,மேலும் குரங்குகள் வனப்பகுதிகளில் வனத்தில் விளையும் உணவுப்பொருட்களை தின்று வளர்ந்த நிலையில் மனிதர்கள்  கடைகளில் தின்பண்டங்களை வாங்கியும் கொடுத்து வருகின்றனர்.மேலும் சுற்றுலாப்பயணிகள்  வழங்கும் உணவுப்பொருட்களை  வன உயிரினமான குரங்குகள் உண்பதால் அதே வழக்கத்திற்குட்டபட்டு குழந்தைகள் முற்றும் பொதுமக்கள் கைகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களை குரங்குகள் பறித்து செல்லும் நிலை உருவாகி சுற்றுலாப்பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகும் நிலைகூட உருவாகும் வாய்ப்பு உள்ளதாழும்,குரங்குகள் பறித்து செல்லும் உணவுப்பொருட்களில் பாலிதீன் கவர்களையம் அப்படியே உட்கொண்டுவிடுவதால் குரங்குகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு    குற்றாலத்தில்  வனத்துறை சார்பில் எச்சரிக்கை பதாகை ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது அந்த பதாகையில் வன உயிரினமான குரங்குகளுக்கு உணவளிப்பதும் அவற்றை இடையூறு செய்வதும் மற்றும் வன உயிரினமான கிளியினை வியாபார நோக்கில் பயன்படுத்துவதும் பல உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 இன் படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் மேற்கண்ட செயல்களில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது தவறும் பட்சத்தில் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வன உயிரின காப்பாளர் மற்றும் குற்றாலம் வனட்சராக அலுவலர் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பு பதாகையை வைத்துள்ளனர் குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை மக்கள் மத்தியில் வரவேற்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via