தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 08-09-2023 07:53:31am
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.

 மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : வானிலை ஆய்வு மையம்

Share via

More stories

Logo