திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே சனாதனம் குறித்த பேச்சுக்களை பூதாகரமாக்கி வருகின்றனர்

by Admin / 08-09-2023 02:31:30am
திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே சனாதனம் குறித்த பேச்சுக்களை பூதாகரமாக்கி வருகின்றனர்

திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே சனாதனம் குறித்த பேச்சுக்களை பூதாகரமாக்கி வருகின்றனர்.என

கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் டாக்டர் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து புதிய தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் புதிய தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களும்  கூறுகையில் :கோவில்பட்டியை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தினுடைய வடக்கு பகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னால் கோவில்பட்டி மையமாக வைத்து ஒரு மாவட்டம் விரைவில் உருவா க்கப்பட வேண்டும். அதற்குண்டான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

திமுக அரசு ஊழல் அரசு என்கிற விஷயம் இந்தியா முழுவதும் தெரிய வரு கையில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது

எல்லா தளங்களிலும் மிகப்பெரிய தோல்வியை தழுவிக் கொண்டு வரும்போது அதை மடைமாற்றம் செய்வதற்காக அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இப்போது சனாதனம் என்கிற பூதாகரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஆளும் திமுக தமிழக மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பி சனாதனம் தான் எதிரி என்பதைப் போல ஒரு புது கதையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தோல்வியை மறைப்பதற்கும்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைவது நிச்சயம் அந்த தோல்வியானது டெபாசிட் பறிபோகாத அளவுக்கு அதை மறைப்பதற்கு தடுப்பதற்காக மடைமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் சொல்கிற சமாதானம் மக்களுக்கு கேடு அல்ல

திராவிடம் தான் தமிழ் சமுதாயத்திற்கு கேடாக உள்ளது. 2021 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது.

 

அதிமுக பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகத்தின் நிலை என்ன என்ற கேள்விக்கு.... 

அது போன்று யார் விரும்பினாலும் நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக மிக கெட்டியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது அந்த கூட்டணியில் விரிசல் என்று யாரும் கனவு காண வேண்டாம். தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் போட்டியிட ஆர்வம் விருப்பம் காட்டுவது குறித்த கேள்விக்கு...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதியை விரும்பி எடுக்கிற இடத்தில் நாங்கள் உள்ளோம். கேட்கிற இடத்தில் இல்லை.  

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன எல்லா கட்சிகளும் வாக்குச்சாவடி அளவில் தங்களது கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் அதே பணியைத்தான் புதிய தமிழகம் கட்சியும் மேற்கொண்டுள்ளது என்றார்.

 

 

Tags :

Share via