குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

by Editor / 15-06-2022 03:17:08pm
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 29ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
வரும் ஜுலை 2ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, மத்திய ஆளும் பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo