தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி பலி

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த இடிகரை, மணியகாரண் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான கீதா, இவர் நேற்று மாலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்பொழுது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் ரயிலில் சிக்கி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார், இது குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலிசார், விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :