திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி தொடங்கியது.

by Editor / 17-02-2023 10:45:09pm
 திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி தொடங்கியது.

சிவராத்திரியை முன்னிட்டு வருடம் தோறும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ஆட்டத்து வெளியில் நாட்டியாஞ்சலி தொடங்கியது.இதனை குத்து விளக்கு ஏற்றி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நாட்டியாஞ்சலி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று சென்னையைச் சேர்ந்த நிருத்ய சேத்ரா நடனக் கலைக்கூடம் ஸ்ரீ அபிநயவர்ஷினி ஸ்கூல் ஆப் மியூசிக் நாட்டியநிருத் அகடமி ஆப் பரதநாட்டியம், டெல்லியைச் சேர்ந்த இந்தி வராார், பெங்களூருவைச் சேர்ந்த ராதா கல்பா,திருவாரூரைச் சேர்ந்த லக்ஷ்னா நாட்டிய கலைக்கூடம் ஆட்டம்ஸ் ஆர்ட்ஸ் அகடமி ஆரூர் தில்லை நாட்டிய வித்தியாலயா ஆகிய நாட்டிய குழுக்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்றைய நாட்டியஞ்சலில் பங்கு பெற உள்ளனர்.

இந்த நாட்டிய அஞ்சலி நாளை(18) மற்றும் நாளை (19)மறுநாள் தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெற உள்ளது நாளை மாலை 6:30 மணிக்கு தொடங்கி 3 மணி வரை இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via