சிலவரி செய்திகளின் தொகுப்பு...

by Editor / 21-11-2021 09:32:19am
சிலவரி  செய்திகளின்  தொகுப்பு...

கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறிய சிறுவன் ராகுல் ராம் 'சிறுத்தையே வெளியில் வா' எனும் கலைஞருக்கு விருப்பமான புரட்சிக்கவியின் பாடலைத் தன் மழலைக்குரலில் பாடிக்காட்டினான். 
"மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக! வாழ்க திராவிடநாடு!" என முழங்கிய அச்சிறுவனின் உணர்வுகண்டு மெய்சிலிர்த்தேன்.- தமிழக முதல்வர் ஸ்டாலின்

 கடலூர்,அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மீண்டும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை.

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை சுரங்க மின் நிலையம் வழியே வினாடிக்கு 17
ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.16கண் பாலம் வழியே வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி திறப்பு.

 மதுராந்தகம் அருகே குடிசை வீடு இடிந்து சுவர் இடிந்து விழுந்து கனவன் மனைவி இருவரும் பலி.


செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து சற்று குறைந்து 9500 கன அடி நீர் உபரிநீராக வெளியேறுகிறது.

நவம்பர் 24-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

 திருச்சி நவல்பட்டு காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் என்பவர் கீரனூர் அருகே பள்ளபட்டி  எனும் இடத்தில் வெட்டி படுகொலை. ஆடு திருடியவர்களை  விரட்டி வந்த போது திருட்டு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு டிஎஸ்பி-கள் தலைமையில், 4 தனிப்படை அமைப்பு.


திமுக விருப்ப மனு

நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு திமுகவில் தொடக்கம்
நகர்மன்ற உறுப்பினர் ரூ10,000, பேரூராட்சி உறுப்பினர் ரூ 2,500 கட்டணமாக நிர்ணயம்
ஆதிதிராவிடர், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும்
திமுகவின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் ரூ 10 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.


 

 

Tags :

Share via

More stories

Logo